2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

கொள்ளையுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்ய நடவடிக்கை

Suganthini Ratnam   / 2015 ஜூன் 01 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகவில்லு பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்யும் வகையில்  விசாரணை இடம்பெற்றுவருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
 
மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த தன்னை  வழிமறித்த கொள்ளையர்கள் தாக்கிவிட்டு, 51,000 ரூபாய்  பணத்தையும்; 3,000 ரூபாய் பெறுமதியான  கையடக்கத்தொலைபேசியையும்  அபகரித்துக்கொண்டு தப்பிச்சென்றதாக  பாதிக்கப்பட்ட நபர் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தான் அடையாளம் கண்டுள்ளதுடன்,   அவர்கள் முச்சக்கரவண்டிச் சாரதிகள் எனவும் அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம்  தொடர்பில் பொலிஸார்  விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X