Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Princiya Dixci / 2015 ஜூன் 01 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஹிரான் பிரியங்கர, எம். எஸ்.முஸப்பிர்
புத்தளம், தில்லையடி பிரதேசத்தில் எட்டு வயது பாடசாலை சிறுமியை கடத்திச் செல்ல முயன்ற இளைஞரை பிரதேசவாசிகள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இன்று திங்கட்கிழமை (01) பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் நகரிலுள்ள சிங்கள பாடசாலையொன்றில் கல்வி பயிலும் குறித்த சிறுமி, பாடசாலை விட்டு வீடு திரும்ப நின்ற போது, சந்தேக நபர் அச்சிறுமியை பலவந்தமான முறையில் கடத்திக் கொண்டு புத்தளம் கொழும்பு வீதியின் தில்லையடி பிரதேசத்துக்கு வந்துள்ளார்.
அப்பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியினுள் பாடசாலைச் சீருடையணித்த சிறுமியுடன் குறித்த நபர் செல்வதைக்கண்ட சிலர், பிரதேசவாசிகளின் துணையுடன் அப்பகுதியில் தேடுதல் நடத்தியுள்ளனர்.
இச்சம்பவம் அப்பிரதேசம் எங்கும் காட்டுத் தீ போல் பரவியதுடன் பெரும் தொகையான மக்கள் அங்கு கூடி தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர், சிறுமி மீட்கப்பட்ட போது சந்தேக நபர் தலைமறைவானார். எனினும், தொடர்ந்து தேடுதல் நடத்தியதில் நீண்ட நேரத்தின் பின்னர் சந்தேக நபர், பொது மக்களினால் பிடிக்கப்பட்டு புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Maria Monday, 01 June 2015 05:06 PM
thank you God
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago