2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

விபத்தில் குடும்பஸ்தர் பலி

Thipaan   / 2015 ஜூன் 02 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முகம்மது முஸப்பிர், எம்.யூ.எம்.சனூன்

புத்தளம்-மன்னார் பிரதான வீதியின் உப்புத்தளத்துக்கு முன்னால் திங்கட்கிழமை (01) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிர் இழந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

கடமையை முடித்துக் கொண்டு துவிச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது பின்னால் வந்த கெப் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் துவிச்சக்கரவண்டியில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளார்.

புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அங்கு சிகிச்சை பயனின்றி உயிர் இழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

புத்தளம் தனியார் உப்பு உற்பத்தியாளர் சங்கத்தில் பாதுகாப்பு உத்தியோகதத்ராக கடமையாற்றி வந்த புத்தளம் - சவீவபுரத்தைச் சேர்ந்த எஸ்.எம்.முகம்மது நசீர் (53 வயது) என்பவரே இவவிபத்தில் உயிர் இழந்தவர்வார்.

புத்தளம் திடீர் மரண விசாரணை அதிகாரி டீ.எம்.ஹிசாம் முன்னிலையில் இடம் பெற்ற போது மரண விசாரணையின் போது விபத்தில் இவரின் உடலில்  அதிக காயங்கள் ஏற்பட்டத்தினால் இடம் பெற்ற மரணம் என தெரிவித்து செவ்வாய்க்கிழமை பகல் (02)  சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைந்தார்.

விபத்துடன் தொடர்புடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X