2025 மே 07, புதன்கிழமை

டெங்கு தொடர்பில் விழிப்பூட்டும் நிகழ்வு

Thipaan   / 2015 ஜூன் 02 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முகம்மட் முஸப்பிர்

டெங்கு நோயிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் மக்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்வு திங்கட்கிழமை (01) சிலாபம் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில்  இடம்பெற்றது.

டெங்கு நோய் பரவும் பகுதிகளில் என அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசங்களிலேயே இந்நிகழ்வு இடம்பெற்றது.

சிலாபம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் அனுசரணையுடன் சிலாபம் பொலிஸ் பிரிவின் சுற்றாடல் பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் போது சிலாபம் வெல்ல பிரதேசத்தில் சிலாபம் பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஹேரத் தலைமையில் மக்களைத் தெளிவு படுத்தும் கையேடுகள் வழங்கப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X