2025 மே 07, புதன்கிழமை

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஜூன் 03 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

காக்கப்பள்ளி மேல் மரதன்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள  குளமொன்றை அண்டிய பகுதியில் இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை  இன்று புதன்கிழமை வலான குற்றத் தடுப்புப் பிரிவினர்   முற்றுகையிட்டுள்ளதுடன்,  சந்தேகத்தின் அடிப்படையில் 48 வயதுடைய  ஒருவரை கைதுசெய்துள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, 83 இலட்சத்து 16 மில்லி லீற்றர் கோடா அடங்கிய 44 பரல்களுடன்  மேலும் பல உபகரணங்களும்  கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தச் சந்தேக நபர் கசிப்பு உற்பத்தி நிலையத்தின் உரிமையாளர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இங்கு  தயாரிக்கப்படும் கசிப்பு புத்தளம் மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கும் எடுத்துச்செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது,

கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேக நபர் சிலாபம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X