Kogilavani / 2015 ஜூன் 04 , மு.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்
எதிர்வரும் பொது தேர்தலில் பொது அணி ஒன்றில் போட்டியிட தாம் தயாராகவுள்ளதாக புத்தளம் மாவட்ட முன்னாள் நகர பிதா கே.ஏ.பாயிஸ் நேற்று தெரிவித்தார்.
இதுதொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
'நமது மக்களின் நீண்டகால நாடாளுமன்ற பிரதிநிதிக்கான போராட்டத்தை வெற்றியடைய செய்ய ஏனைய அரசியல் தலைமைகள், இயக்கங்கள், குழுக்கள் ஆகியோருக்கும் பொது அணி ஒன்றில் போட்டியிட முன்வருமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு முன்வருமாறு புத்தளம் மாவட்ட, பிரதேச உலமா சபை, புத்தளம் பெரியபள்ளிவாயல் உட்பட ஏனைய பள்ளிவாசல்களின் தர்மகர்த்தாக்கள், கல்வியியலாளர்கள், இளைஞர் மற்றும் மாதர் அணிகள் ஆகியவற்றுக்கு அன்புடன் அழைப்பு விடுக்கின்றோம்.
கட்சி மற்றும் சுய நலன்களுக்கு அப்பால் நாம் எடுத்திருக்கின்ற இந்த முடிவை பயன்படுத்தி நமது சமூகத்தின் வெற்றியை உறுதிப்படுத்த விரும்பும் அனைத்து நல்லிதயங்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்' என அவர் மேலும் தெரிவித்தார்.
52 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
4 hours ago
4 hours ago