Sudharshini / 2015 ஜூன் 06 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். எஸ். முஸப்பிர்
மோட்டார் சைக்கிள் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் ஆவணங்களுடன் கூடிய பையொன்றினைத் திருடியதாகக் கூறப்படும் இரண்டு பாடசாலை மாணவர்களை வெள்ளிக்கிழமை (05) கைது செய்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர்.
மாதம்பை பிரதேச பாடசாலையொன்றில் 10ஆம் வகுப்பில் கல்வி பயிலும் இரு மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாதம்பை குருக்குவ பிரதேசத்தில் அமைந்துள்ள பாலர் பாடசாலைக்கு தனது பிள்ளையை விட்டுச் செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் வந்து பெண் ஒருவர், 60 ஆயிரம் ரூபாய் பணம் தனது அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் கொண்ட கைப்பையை மோட்டார் சைக்கிளில் வைத்துவிட்டு சென்றுள்ளார்.
திரும்பி வந்து பார்த்த போது கைப்பையை காணவில்லை என உணர்ந்த மாதம்பை வெல்லவாகார பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய யுவதி சம்பவம் தொடர்பில் மாதம்பை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பிதிவு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டையடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட மாதம்பை பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய இரு பாடசாலை மாணவர்களையும் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்களிடமிருந்து 55 ஆயிரம் ரூபாய் பணத்துடன் முறைப்பாட்டாளரான யுவதியின் அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டள்ள குறித்த மாணவர்கள் இருவரையும் சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதோடு மாதம்பை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
54 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
4 hours ago
4 hours ago