2025 மே 07, புதன்கிழமை

துஷ்பிரயோகத்தை தடுப்பது தொடர்பிலான செயலமர்வு

George   / 2015 ஜூன் 12 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு புத்தளம் வைத்தியசாலையில் இன்று வெள்ளிக்கிழமை 'சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோக தடுப்பு நடவடிக்கைகளை முகாமைத்துவம் செய்தல்'  எனும் தலைப்பில் அரச ஊழியர்களுக்கான செயலமர்வு இடம்பெற்றது. 

இதன் போது சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பது தொடர்பிலான விளக்க உரைகள் நிகழ்த்தப்பட்டன.

புத்தளம் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் அசோக் பெரேரா தலைமையில் ஆரம்பமாக இச்செயலமர்வின் புத்தளம் மாவட்ட மேலதிக மாவட்டச் செயலாளர் வன்னிநாயக்கா, புத்தளம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், உட்பட சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள், விஷேட வைத்திய நிபுணர்களுடன் மாவட்டத்தில் உள்ள பல்வேறு திணைக்கள அதிகாரிகள் உட்பட ஊழியர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் விஷேட வைத்திய நிபுணர் குழுவினரால் எழுதப்பட்ட சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் அவற்றைத் தடுத்தல் தொடர்பிலான நூலும் இந்நிகழ்வின் போது வெளியிடப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X