2025 மே 07, புதன்கிழமை

நாகதம்பிரான் ஆலயம் உடைக்கப்பட்டு கொள்ளை

Thipaan   / 2015 ஜூன் 16 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

புத்தளம் மாவட்டத்தின் உடப்பு-செல்புரம் நாகதம்பிரான் ஆலயம் இன்று அதிகாலை இனம் தெரியாதவர்களினால் உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக ஆலய நிரவாகத்தினர் உடப்பு மற்றும் முந்தல் ஆகிய பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இன்று அதிகாலை ஆலய  குருக்கள்  ஆலயத்துக்கு வந்த போது ஆலயத்தின் பிரதான கதவு உடைப்பட்டு இருந்துள்ளது.

மூலதஸ்தானமும் உடைக்கப்பட்டு அங்கிருந்த விக்கிரகத்தின் கழுத்தில் போடப்பட்டிருந்ந தங்கச் சங்கிலிகளும் கீழ்ப்பாகத்தில் காணப்பட்ட தங்க தகடு மற்றும் காணிக்கைப்பெட்டியும் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை அவதானித்தவுடன் ஆலய நிர்வாகத்திடம் தெரிவித்தாக அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து ஆலய நிர்வாகம் பொலிஸ் நிலையங்களில் செய்த முறைப்பாட்டையடுத்து உடப்பு பொலிஸார் வருகை தந்து இவ்விடயமாக ஆராய்ந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X