Princiya Dixci / 2015 ஜூன் 19 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ். முஸப்பிர்
முந்தல் மாவட்ட வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரியை மாற்றுமாறு கோரி, வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட சிற்றூழியர்களும் பொது மக்களும் இணைந்து, வைத்தியசாலைக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (19) ஈடுபட்டனர்.
இதன் காரணமாக வைத்தியசாலையின் சேவைகள் பாதிக்கப்பட்டு இருந்தது. இன்று சிகிச்சைக்காக வந்த சிறுவர்கள் முதல் பெரியோர் வரை பல மணி நேரம் காத்து நின்றதோடு பலர் திரும்பிச் செல்லும் நிலையேற்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இதற்கு தீர்வு கிடைக்கும் வரை பணிபகிஷ்கரிப்புடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.
பின்னர் புத்தளம் மாவட்ட பிரதி சுகாதார பணிப்பாளர் இங்கு வருகைதந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களுடன் உரையாடினார்.
இதனையடுத்து கடமையில் இருந்தவருக்கு விடுமுறையை வழங்கியதோடு இங்கு கடமையாற்றி வந்த வைத்தியர் ஒருவருக்கு மாவட்ட வைத்திய அதிகாரியாக கடமையாற்றுமாறு அனுமதியை வழங்கியதையடுத்து ஆர்ப்பாட்டமும் பணிபகிஷ்கரிப்பும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.


54 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
4 hours ago
4 hours ago