Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Sudharshini / 2015 ஜூன் 28 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இஸ்லாமிய போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
14 வயதுக்கு மேற்பட்ட இஸ்லாமிய ஆண்கள் இப்போட்டியில் பங்குபற்ற முடியும் என்பதுடன் போட்டியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெறுபவர்களுக்கு பெறுமதிமிக்க பரிசுகளும், சான்றிதழ்களும், நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட உள்ளன.
14 – 16 வயதுடையவர்கள் முதலாம் பிரிவாகவும், 17 – 20 வயதுடையவர்கள் இரண்டாம் பிரிவாகவும், 21 – 35 வயதுடையவர்கள் மூன்றாம் பிரிவாகவும் 36 வயதுக்கு மேற்பட்டோர் நான்காம் பிரிவாகவும் போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபெறலாம்.
அல் கிராஅத், இஸ்லாமிய கீதம், பேச்சுப்போட்டி, அதான் கூறுதல், கஸீதா, அறிவுக்களஞ்சிய எழுத்துப் போட்டி, ஓரங்க நாடகம், மேடைக் கவிதை போன்ற நிகழ்ச்சிகள் மேற்படி வயதெல்லைகளுக்கு ஏற்ப குறித்த தலைப்புகளுக்குள் நடத்தப்படும்.
போட்டியாளர்கள் போட்டிக்கான விண்ணப்ப படிவத்தையும், விவரக்குறிப்பையும் புத்தளம் 'ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத்தில்' பெற்றுக்கொள்ள முடியும்.
இப்போட்டிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் 03.07.2015 க்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போட்டிகள் எதிர்வரும் 07.07.2015 (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணிமுதல் புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் நடைபெறும்.
பரிசளிப்பு நிகழ்வுகள் 11.07.2015ஆம் திகதி மாலை 3 மணி முதல் புத்தளம் நுஹ்மான் வரவேற்பு மண்டபத்தில் ஆரம்பித்து இப்தார் நிகழ்வுடன் நிறைவடையும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
5 hours ago