2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

25ஆவது வருட பூர்த்தி

எம்.யூ.எம். சனூன்   / 2017 ஒக்டோபர் 17 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புத்தளம், தில்லையடி அல் மத்ரஸதுல் குர்ஆனியதுல் பலாஹியாவின் 25ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு, விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

இந்நிகழ்வுகள், அல்மத்ரஸதுல் குர்ஆனியதுல் பலாஹியா பணிப்பாளர் அஷ்ஷேக் அப்துல்மலிக் தலைமையில் தில்லையடி அம்மார் வரவேற்பு மண்டபத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) மாலை இடம்பெறவுள்ளன.

இந்நிகழ்வில் ஓர் அங்கமாக சிறப்புப் பேச்சாளரான புத்தளம் ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத்தின் பணிப்பாளர் அஷ்ஷேக் எச். அப்துல்நாஸர் (ரஹ்மானி) கலந்துகொள்ளவுள்ளார். 

மேலும், உலமாக்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள், மத்ராசாவின் பழைய மாணவ, மாணவியர், பெற்றோர், மஸ்ஜித் நிர்வாகிகள், ஊர்பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .