2025 மே 26, திங்கட்கிழமை

26 கிரமங்களில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தல்

Super User   / 2011 ஓகஸ்ட் 24 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம் மாவட்டத்தில் புதிதாக 26 கிரமங்களில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சித் திட்டம் நடைமுறைப்படுத்த உள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் புத்தளம் மாவட்ட காரியாலயம் தெரிவித்தது.

கிராம அபிவிருத்தி அமைபபுக்களின் ஊடாக குறித்த கிராமங்களில் மக்களினால் இனங்காணப்படும் அபிவிருத்தி திட்டங்கள் மீள் எழுச்சி  திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.

இத்திட்டத்திற்கு குறித்த கிராமத்தில் உள்ள மொத்த சனத்தொகைக்கு அமைவாக ஒரு நபருக்க 6 ஆயிரம் ரூபா வீதம் நிதியொதுக்கீடு செய்யப்படும். இந்த நிதியை கொண்டு மக்களால் தெரிவுசெய்யப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறித்த அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மாவட்ட காரியாலயத்தின் கண்காணிப்பின் கீழே இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X