Editorial / 2018 மே 11 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜூட் சமந்த
அனுமதிப்பத்திரமின்றி, 4,500 கிலோ கிராம் மாட்டிறைச்சியை குளிரூட்டப்பட்ட லொறி ஒன்றில் கொண்டு சென்ற சந்தேக நபர்கள் இருவரை, ஆனமடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் இன்று (11) அதிகாலை, ஆனமடுவ பகுதியில் வைத்து, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், பள்ளம- ஆட்டிகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்களென, பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட லொறியில், வெட்டப்பட்ட நிலையில் 17 மாடுகளின் தலைகள் காணப்பட்டதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில், ஆனமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
24 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
38 minute ago