2025 மே 19, திங்கட்கிழமை

5 பிள்ளைகளின் தந்தை வெட்டிக்கொலை

Kanagaraj   / 2014 பெப்ரவரி 01 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். எஸ். முஸப்பிர்

ஆனமடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதலைக்குளி பிரதேசத்தில் முதலைக்குளி ராஜபக்ஷ தோட்டத்தைச் சேர்ந்த வி. பப்ளிஸ் நிஹால் (வயது 52) எனும் ஐந்து பிள்ளைகளின் தந்தை கத்தியால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் அதே ஊரைச்  சேர்ந்த மற்றொருவருடன் நீண்டநாட்கள் பிரச்சினைகளை ஏற்படுத்தி கொண்டிருந்துள்ளார். இதன் காரணமாக அடிக்கடி இவ்விருவருக்குமிடையில் தகராறுகள் இடம்பெற்று வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நேற்று மாலையும் இருவருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது சந்தேக நபர் கால் ஒன்றினை வெட்டிப் போட்டுவிட்டு அங்கிருந்து  தப்பிச் சென்றிரப்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்திருப்பதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர்.

தலைமறைவாகியுள்ள சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகத் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X