2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

5 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

Freelancer   / 2021 நவம்பர் 17 , பி.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

தெதுரு ஓயா, ராஜாங்கன, இங்கினிமிட்டிய, அங்கமுவ  மற்றும் தப்போவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள், இன்று (17) திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

குறித்த நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு அதிகரித்துள்ளமையால் இவ்வாறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதன்படி, தெதுரு ஓயா நிர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் இரண்டு அடி வரையும், ராஜாங்கன நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் இரண்டு அடி வரையும், தப்போவ நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் 6 அங்குலம் வரையும் , இங்கினிமிட்டிய மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களின் தலா இரண்டு வான் கதவுகள் வீதம் ஒரு அடி வரையும் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய கடமை நேர அதிகாரியொருவர் தெரிவித்தார்.
 
இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் இன்று புதன்கிழமை (17) மாலை கடும் மழை பெய்துள்ள போதிலும் எவ்வித அனர்த்தங்களும் ஏற்படவில்லை எனவும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .