2025 மே 23, வெள்ளிக்கிழமை

602ஆம் இலக்க வீதியில் தனியார் பஸ்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Super User   / 2012 நவம்பர் 26 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(இ.அம்மார்)

குருநாகல்  - கண்டி 602ஆம் இலக்க வீதியிலுள்ள தனியார் போக்குவரத்து பஸ்கள் இன்று திங்கட்கிழமை காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்குரிய ஊழியர்கள் தனியார் போக்குவரத்து ஊழியர் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது தாக்கிய சந்தேகநபரை கைது செய்யுமாறு கோர்p தனியார் போக்குவரத்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குருநாகல் - கண்டி  602 இலக்க வீதியில் குருநாகலிலிருந்து மாவத்தகம, மெடிபொக்க, கண்டி ஆகிய பகுதிகளுக்குச் பயணிக்கும் தனியார் பஸ்ஸுகளும் இயங்கவில்லை.

இதன் காரணமாக பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கக் கூடியதாக இருந்தன. எனினும் இலங்கை போக்குவரத்துப் பிரிவினர் வேறு பகுதிகளில் ஈடுபடுத்தும் பஸ்களைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு  சேவைகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X