Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2016 மே 31 , மு.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
“ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வியாழக்கிழமை (02) புத்தளத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்” என வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் நியாஸ் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இதுபற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது,
புத்தளம் மாவட்டத்துக்கு விஜயம் செய்யும் அமைச்சர் ஹக்கீம், வியாழக்கிழமை புத்தளம் மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் புத்தளம் மற்றும் கற்பிட்டி ஆகிய பிரதேசங்களின் நகர திட்டமிடல் தொடர்பான விஷேட கலந்துரையாடலொன்றிலும் கலந்துகொள்ளவுள்ளார்.
இதன்போது, புத்தளம் மற்றும் கற்பிட்டி ஆகிய பிரதேசங்களின் நகர அலங்காரம், கிராமிய குடிநீர்த்திட்டம் மற்றும் கற்பிட்டி பிரதேச சபைக்குட்பட்ட 30 கிராமங்களுக்கு வழங்கப்படவுள்ள குடிநீர்த்திட்டம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பிலும் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளதுடன், குறித்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளன.
அத்துடன், அன்றைய தினம் மாலை புழுதிவயல், கொத்தான்தீவு, கடையாமோட்டை ஆகிய பிரதேசங்களுக்கும் விஜயம் செய்யும் அமைச்சர் ஹக்கீம், புழுதியவயல், கொத்தான்தீவு ஆகிய பிரதேசங்களில் மகளிர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் அங்குரார்ப்பண நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளார்.
அத்தோடு, கற்பிட்டி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கற்பிட்டி மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பிரதேச மக்கள் மிக நீண்ட காலமாக எதிர்நோக்கி வருகின்ற குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் கற்பிட்டி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட இரு நீர்த்தாங்கிகள் நிர்மாணிக்கப்படவுள்ள பிரதேசங்களையும் அமைச்சர் ஹக்கீம் பார்வையிடவுள்ளார்.
இதேவேளை, அன்றையதினம் மாலை 6 மணிக்கு கடையாமோட்டையில் பாரிய பொதுக்கூட்டமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அமைச்சர் ஹக்கீம் கலந்துகொண்டு விஷேட உரையாற்றவுள்ளார் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
15 minute ago
25 minute ago
41 minute ago