Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2016 ஜூன் 20 , மு.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
“புத்தளம் மாவட்டத்திலுள்ள சகல கட்சிகளையும் சேர்ந்த அரசியல்வாதிகளை புத்தளம் பெரியபள்ளி மற்றும் உலமா சபை என்பன வழிநடத்த வேண்டும்” என புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி தெரிவித்தார்.
புத்தளத்தில் இயங்கிவரும் விஞ்ஞானக் கல்லூரியில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பிலான கலந்துரையாடலும், இப்தார் நிகழ்வும் சனிக்கிழமை(18) புத்தளம் நுஹ்மான் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“கல்வி விடயத்தில் கட்சி பேதங்களின்றி பணியாற்ற வேண்டும். எந்தக் கட்சியாக இருந்தாலும் ஆரம்பித்த பணிகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே என்னுடைய ஒரே நோக்கமாகும்.
அத்துடன், புத்தளத்தில் பல கட்சிகளைச் சார்ந்தவர்கள் உள்ள போதிலும் கல்வி விடயத்தில் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும். அப்போதுதான் எமது இளைய சமுதாயத்தினரை வெற்றிப்பாதையை நோக்கிக் கொண்டுசெல்ல முடியும்.
எமது மாவட்டத்தில் பல குறைபாடுகள் காணப்படுகிறது. அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும் உள்ளது. அகில இலங்கை ரீதியில் பெயரைப் பெற்றுக்கொடுத்துள்ள புத்தளம் விஞ்ஞானக் கல்லூரியில் பல குறைபாடுகள் காணப்படுவதாக அதிபர் தெளிவுபடுத்தினார்.
இக்குறைபாடுகள் பற்றி ஏற்கெனவே புத்தளம் விஞ்ஞானக் கல்லூரியின் அதிபர் குறைபாடுகள் பற்றி என்னிடம் பேசியிருக்கிறார். விஞ்ஞானக் கல்லூரி தொடர்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஊடாக அமைச்சர் பைசர் முஸ்தபாவுடன் பேசியிருக்கிறோம். நெல்சிப் திட்டத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்படாமல் உள்ள கட்டடத்தை முழுமையாக கட்டி முடிப்பதற்கு அமைச்சர் பைசர் முஸ்தபா இணக்கம் தெரிவித்துள்ளார்.
அதுபோன்று தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்குப் பொறுப்பாகவுள்ள இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணனை நானும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் நேரில் சந்தித்தோம். இச்சத்திப்பின் போது இந்த விஞ்ஞானக் கல்லூரிக்கு நிர்வாகக் கட்டடம் ஒன்றை பெற்றுக்கொடுப்பதற்குரிய ஏற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளோம்.
அதுமாத்திரமின்றி, புத்தளம் சாஹிராக் கல்லூரிக்கு மூன்று மாடி நிர்வாகக் கட்டடமும், புத்தளம் அனந்தா தேசியப் பாடசாலைக்கும் நிர்வாகக் கட்டடமொன்றும் பெற்றுக்கொடுக்கப்பட்டு தற்போது கேள்வி மனுக் கோரல் செய்யும் நிலையிலுள்ளது.
அத்துடன், புத்தளத்தில் வடிகாலமைப்பு சீரின்மையினால் மழை காலங்களில் நீர் தேங்கி நின்று முழுப் பிரதேசமும் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலை தொடர்ச்சியாகக் காணப்படுகிறது. எனவே, புத்தளம் நகரில் வெள்ள நீர் வழிந்தோடுவதற்கு ஏற்ற வகையில் வடிகாலமைப்பு வசதிகளை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்ட்டுள்ளது.
அத்துடன், எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க 5 மில்லியன் குருநாகலில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனைய நிதி புத்தளம் மாவட்டத்தில் சகல பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு என சகல துறைகளையும் உள்ளடக்கிய வகையில் எனக்கு ஒதுக்கீடு செயய்ப்பட்ட பண்முகப்படுத்தப்பட்ட நிதியை நிதியை பகிர்ந்தளித்துள்ளேன்” என்றார்.
இதேவேளை, “புத்தளத்தில் பாதைகள் புனரமைப்புச் செய்வதற்கு முதற்கட்டமாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல ஊடாக 26 மில்லியன் பெறப்பட்டுள்ளது. ஏனையவை கட்டடம் கட்டமாக முன்னெடுக்கப்படும். அத்துடன், புத்தளத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் பலநோக்கு கூட்டுறவு சங்கம், சதொச என்பனவற்றை உள்ளடக்கிய மூன்று மாடிகளைக்கொண்ட கட்டடம் நிருமாணிக்கப்படவுள்ளது.
அத்தோடு, மதுரங்குளி, கற்பிட்டி ஆகிய பிரதேசங்களிலுள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கங்களுக்கும் புதிய கட்டடங்கள் நிருமாணித்துக்கொடுக்கப்படவுள்ளன” எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
9 hours ago