Princiya Dixci / 2016 ஜூன் 02 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் கல்வி வலயத்துக்குட்பட்ட மைலங்குளம் சிங்கள மஹா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரிய பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து தருமாறு கோரி, பெற்றோர்களும் மாணவர்களும், புத்தளம் வலயக் கல்விப் பணிமனைக்கு முன்னால், நேற்று புதன்கிழமை(01), பிரதான வாயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரம்ப கல்வியிலிருந்து க.பொ.த. (சா/த) வரையிலான வகுப்புகள் உள்ள இப்பாடசாலையில் 8 ஆசிரியர்கள் மாத்திரமே பணியாற்றி வருவதாகவும் குறித்த பாடசாலையில் 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்வதாகவும் நிரந்தர நியமனம் பெற்ற அதிபர் ஒருவர் இல்லாமலும் தவிக்கும் இப்பாடசாலையின் குறைகளை நிவர்த்தி செய்து தருமாறு கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாதைகள் தாங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago