Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜூலை 11 , மு.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-முஹம்மது முஸப்பிர்
அரசாங்கத்தின் வட் அதிகரிப்புக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டம் ஒன்று சனிக்கிழமை(09) மாலை சிலாபம் நகரின் பிரதான சுற்றுவட்டத்துக்கு அருகாமையில் இடம்பெற்றது.
மக்கள் விடுதலை முன்னணியின் புத்தளம் மாவட்ட தலைவர் சமநடத கோரள ஆராய்ச்சி தலைமையிலேயே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
சிலாபம் நகரின் அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடி இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு வழங்குமாறு சிலாபம் வர்த்தக சமூகத்திடம் ஏற்பாட்டாளர்களினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்த போதும் தாம் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என சிலாபம் வர்த்தக சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற சமயம் சிலாபம் நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் திறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .