ரஸீன் ரஸ்மின் / 2017 ஜூலை 11 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
முந்தல், உடப்பு பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பொலிஸ் நிலையம், எதிர்வரும் 15ஆம் திகதி சனிக்கிழமை வைபவ ரீதியாகத் திறந்துவைக்கப்படவுள்ளது.
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, குறித்த பொலிஸ் நிலையத்தை உத்தியோகப்பூர்வமாகத் திறந்துவைப்பார்.
இந்த நிகழ்வில், புத்தளம் மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சம்பிக்க ஸ்ரீவர்தன, புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ.சந்திரசேன உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் உடப்பு பகுதியில் புதிதாக திறந்து வைக்கப்படும் 11ஆவது பொலிஸ் நிலையம் இதுவாகும்.
அத்துடன், முந்தல் பொலிஸ் நிலையத்தின் கீழ் இதுவரை காலமும்
இருந்த 41 கிராம சேவகர் பிரிவுகளில் 11 கிராம சேவகர் பிரிவுகள், உடப்பு பிரதேசத்தில் திறந்துவைக்கப்படவுள்ள புதிய பொலிஸ் நிலையத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பதுளுஓயா, புளிச்சாங்குளம், ஆண்டிமுனை, உடப்பு 594, உடப்பு 594 பி, சின்னப்பாடு, பள்ளிவாசல்பாடு, பூனைப்பிட்டி, கட்டைக்காடு, கொத்தாந்தீவு, பெருக்குவற்றான் ஆகிய 11 கிராம சேவகர் பிரிவுகளே புதிய பொலிஸ் நிலையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 minute ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
7 hours ago
9 hours ago