Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-முஹம்மது முஸப்பிர்
உல்லாசப் பயணம் மேற்கொண்டிருந்த வேளையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (14) மாலை கடலில் குளித்துக் கொண்டிருந்தவர்களுள் ஒருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற் போயுள்ளதாக வென்னப்புவப் பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த விபுல ஸ்ரீகாந்த் மல்லியாவடு (வயது 22) என்ற இளைஞனே இவ்வாறு அலையில் சிக்குண்டு காணாமற் போயுள்ளார்.
காணாமற் போன இளைஞன், கண்டி நகரில் அமைந்துள்ள அலைபேசி நிறுவனமொன்றின் விற்பனை நிலைத்தில் பணியாற்றி வருவதோடு, அந்நிறுவனத்தின் சக ஊழியர்களோடு இணைந்து உல்லாசப் பயணம் மேற்கொண்டு செல்லும் வழியில் வென்னப்புவப் பிரதேசத்துக்கு வந்துள்ளனர்.
இவ்வாறு வந்தவர்கள், வைக்கால கம்மலப் பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல உல்லாசப் பயண ஹோட்டலில் பகல் உணவுக்காகச் சென்றிருந்துள்ளதுடன், சிலர் ஹோட்டலில் இருந்த நிலையில் இன்னும் சிலர் ஹோட்டலின் பின்புறம் கடலில் குளிப்பதற்காகச் சென்றிருந்துள்ளனர்.
இவ்வாறு கடலில் குளித்துக் கொண்டிருந்தவர்களுள் நால்வர், கடல் அலையில் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதோடு, இதனை அவதானித்த கரையில் நின்றவர்கள் கூக்குரலிட்டதில் அங்கு வந்த பிரதேவாசிகள் மேற்கொண்ட முயற்சியினால் அலையில் அடித்துச் செல்லப்பட்டவர்களுள் மூவர் காப்பாற்றப்பட்டு கரைசேர்க்கப்பட்டுள்ளனர்.
எனினும், அவர்களுள் ஒரு இளைஞனைக் அவர்களால் மீட்க முடியாது போனதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் வென்னப்புவப் பொலிஸ் நிலையத்தின் தலைமையகப் பொலிஸ் பரிசோதகர் வசந்த குமாரவின் ஆலோசனையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
39 minute ago
53 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
53 minute ago
2 hours ago
2 hours ago