Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜூலை 05 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட்.ஷாஜஹான்
ஊடகவியலாளர் பிரடி கமகே மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை (05) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேக நபர்களின் சார்பில் விடுக்கப்பட்ட பிணை கோரிக்கையை நிராகரித்த நீர்கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேட் ருச்சிர வெலிவத்த, சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
அத்துடன், இந்த வழக்கு சம்பந்தமான பொலிஸ் விசாரணையை சிரேஷ்ட பிரதி பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் மேற்கொண்டு ஒரு வார காலத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.
“இந்த வழக்கு சம்பந்தமாக தொலைபேசி உரையாடல் தகவல்கள் கிடைத்து ஒரு மாத காலமாகியும் இதுதொடர்பாக தெளிவான பதிலொன்றை வழங்க பொலிஸாரால் ஏன் முடியாதுள்ளது?” என நீதவான் நீர்கொழும்பு பொலிஸ் நிலைய சிறு முறைப்பாடுகள் பிரிவின் பொறுப்பதிகாரியிடம் வினவினார்.
இந்த தாக்குதல் சம்பவம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைக்கு சிறிது காலம் தேவைப்படுவதாகவும் அந்த பொறுப்பதிகாரி நீதவானிடம் தெரிவித்தார்.
நீர்கொழும்பு பிரதிமேயர் தனக்கு தொலைபேசி மூலமாக அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பாக வழக்கின் முறைப்பாட்டாளர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். அது வழக்கின் பி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும், பொலிஸ் விசாரணைகளின் போது இந்த விடயம் கவனத்திற்கொள்ளப்படாமல் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
அதேபோன்று, வழக்கின் முதலாவது சந்தேக நபருக்கும் பிரதி மேயருக்கும் இடையில் தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற அன்று 13 தடைவைகள் தொலைபேசி உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஆயினும், அதற்கு முன்னர் மே மாதத்தில் இருவருக்குமிடையில் எந்தவொரு தொலைபேசி உரையாடல்களும் இடம்பெறவில்லை.
எவருக்கும் இதுதொடர்பாக சந்தேகம் ஏற்படும் என்று மாத முறைப்பாட்டாளரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மன்றில் தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீதவான் ஒத்திவைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .