2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

எஜமானை காப்பாற்ற, யானைக்கு சவால் விட்ட நாய்

Editorial   / 2023 மே 29 , பி.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

காட்டு யானை தாக்கி உயிரிழந்த தனது எஜமானரின் உடலை வேறு எவருக்கும் எடுத்துச் செல்ல அனுமதிக்காத நாய்  குறித்த செய்தி மஹாந்தரவெவ தல்கஸ்வெவ பிரதேசத்தில்  பதிவாகியுள்ளது.

மஹாந்தரவெவ பாடசாலைக்கு அருகில் வசித்த 50 வயதுடைய ஏ.எச்.எம் சமந்த அபேசிங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர், மூன்று பிள்ளைகளின் தந்தையென பொலிஸார்  தெரிவித்தனர்.

இறந்தவரின் நண்பர்கள் இருவர் தல்கஸ்வெவ பகுதிக்கு மீன்பிடிக்க போவோமா என கேட்டுள்ளனர். எனினும், யானைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நபர் தனது கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதால் வரமுடியாது என அந்தப் பயணத்துக்கு முதலில்  மறுத்துள்ளார்.

அப்போது, ​​பயணத்துக்காக நண்பர் ஒருவர் இரண்டு காலணிகளை கொண்டு வந்து கொடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர். எனினும், அந்தப் பயணித்தில் உயிரிழந்த மூன்று பிள்ளைகளின் தந்தை இணைந்துகொண்டார். அவரு​டைய வீட்டில் வளர்க்கப்பட்ட நாயும் இந்தப் பயணத்தில் இணைந்துள்ளது.

இக்குழுவினர் வனப்பகுதி வழியாக நடந்து சென்று கொண்டிருந்த போது அவர்களுக்கு எதிரே காட்டு யானை ஒன்று வந்துள்ளது.  நண்பர்களில் ஒருவர் மரத்தின் மீது ஏறிக்கொண்டார்.  மற்றைய நண்பர் ஓடி வந்து புதரில் ஒளிந்து கொண்டது.

மூன்று பிள்ளைகளின் தந்தையும் நாயும் தனியாக இருந்ததால், நாய் தனது எஜமானரைக் காப்பாற்ற குறைத்துக்கொண்டு பலமுறை யானையை நோக்கி முன்னோக்கி பாய்ந்துள்ளது.  நாயைத் தாக்க முயன்ற காட்டு யானை, மூன்று பிள்ளைகளின் தந்தையைக் கொன்றது.

காட்டு யானை தாக்கியதில் மூன்று பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எனினும், அவரது சடலத்தை எடுக்க நாய் யாரையும் அனுமதிக்காது காவல் காத்தது.  இறுதியாக நெருங்கிய உறவினர்கள் வந்த பின்னரே, சடலத்தை எடுத்துச் செல்ல நாய் அனுமதித்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X