2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

எம்.பி ஒருவரின் காரில் மோதுண்டு நபர் பலி

Editorial   / 2022 மே 05 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் காரில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாலாவி - கற்பிட்டி பிரதான வீதியில் நேற்றிரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

காரை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .