Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2016 ஜூன் 14 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியில் புத்தளத்தில் முன்னெடுக்கப்படுகின்ற குடிநீர் விநியோகத்திட்டப் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இது பற்றி அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
புத்தளம் மாவட்டத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற குறித்த குடிநீர்த் திட்டப் பணிகள் நீண்ட நாட்களாக மந்த கதியில் முன்னெடுக்கப்பட்டன.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இரு வாரங்களுக்கு முன்னர் புத்தளத்துக்கு விஜயம் செய்த போது நகர அலங்காரம், நீர் வழங்கல் தொடர்பான கலந்துரையாடலொன்று புத்தளம் கச்சேரியில் இடம்பெற்றது.
இதன்போது, புத்தளம் மாவட்டத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியில் முன்னெடுக்கப்படுகின்ற குடிநீர்த் திட்டப் பணிகள் நிறைவு செய்யப்படாமல் நீண்ட நாட்களாக மந்த கதியில் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் ரவூப் ஹக்கீமின் கவனத்துக்கு கொண்டு வந்தேன்.
இது குறித்து கவனம் செலுத்திய அமைச்சர், குறித்த பணிகள் தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் கேட்டறிந்துகொண்டு, மிக விரைவாக அந்தப் பணிகளை நிறைவு செய்யுமாறும் பணிப்புரை விடுத்தார்.
அமைச்சரின் பணிப்புரையை அடுத்து மந்தகதியில் முன்னெடுக்கப்பட்ட புத்தளம் மாவட்ட குடிநீர் விநியோகத் திட்டப் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
9 hours ago