2025 மே 14, புதன்கிழமை

காணாமல் போன சிறுவன் வீடு திரும்பினான்

Niroshini   / 2016 மே 06 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

காணாமல்போயிருந்த 12 வயது  சிறுவன் அவனது மாமியின் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக கொஸ்வத்தை பொலிஸார் தெரிவித்தனர். 

கிரிமெட்டியான பிரதேச பாடசாலை ஒன்றில் 7ஆம் வகுப்பில் கல்வி கற்கும், கொஸ்வத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்தவட்டான் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு காணாமல் போன நிலையில் மீட்கப்பட்டுள்ளான்.

செவ்வாய்க்கிழமை(03) பாடசாலைக்குச் சென்ற தனது மகன் மீண்டும் வீடு திரும்பவில்லை என அச்சிறுவனின் தந்தை கொஸ்வத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்துள்ளார். 

சிறுவனின் தாயும் தந்தையும் வீட்டில் தகராற்றில் ஈடுபட்டப் பின்னர்  சிறுவனின் தாய் சிறுவனையும் தந்தையையும் விட்டு விட்டு வீட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்.

இச்சம்பவத்தின் பின்னர் தனது தாயை அழைத்து வருமாறு அடிக்கடி தந்தையை வற்புறுத்தியுள்ள இச்சிறுவன்,  செவ்வாய்க்கிழமை(03) பாடசாலைக்குச் செல்வதையும் நிராகரித்துள்ளான். எனினும் தந்தையின் வற்புறுத்தலினால் பாடசாலை சென்றுள்ள சிறுவன் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை நிறைவடைந்து, சிறுவன் வென்னப்புவ ஹூந்திராபொல பிரதேசத்தில் வசிக்கும் தனது தந்தையின் சகோதரி ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில், அவ்வீட்டிலிருந்தவர்கள் இது தொடர்பில் சிறுவனின் தந்தைக்கு அறிவித்துள்ளனர்.

அதன் பின்னர் அங்கு சென்ற சிறுவனின் தந்தை, சிறுவனை அழைத்து வந்துள்ளதோடு கொஸ்வத்தை பொலிஸ் நிலையத்துக்கும் சிறுவனை அழைத்துச் சென்று தனது முறைப்பாட்டை மீளப்பெற்றுக் கொண்டுள்ளதாகத்  தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .