2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கிராம சேவகர்களில் ஒருவர் கைது; ஒருவருக்குச் சிறை

Princiya Dixci   / 2016 ஜூன் 01 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹிரான் பிரியங்கர ஜயசிங்க

பெண்ணொருவரிடம் 15 ஆயிரம் ரூபாயினை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின்பேரில், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணைப் பிரிவு பொலிஸாரினால், கிராம சேவகர் ஒருவர், நேற்று செவ்வாயன்று (31) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். 

வட்டப்பல, மாவீகும்புரப் பிரதேசத்துக்கான கிராம சேவகரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

வெளிநாட்டு வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளவதற்கான, குடும்பம் சார்பான சுயவிபரக் கோவையொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக வந்த பெண்ணிடமே இவர் இலஞ்சம் பெற்றுள்ளதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

இதேவேளை, 16 வயதுடைய சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய கிராம சேவகர் ஒருவருக்கு, 10 வருடகால கடூழிய சிறைத்தண்டனை விதித்து, புத்தளம் நீதவான்; கிளிடஸ் டோப், திங்கட்கிழமை (30) உத்தரவிட்டார்.

மேலும் 5,000 ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபாய் நஷ்டஈடு செலுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார். வனாத்தவில்லுவ பகுதிக்கான கிராம சேவகருக்கே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இவர், 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதியன்று, வனாத்தவில்லுவ பகுதியிலுள்ள 16 வயது சிறுமியை, துஷ்பிரயோகத்து உட்படுத்தினார் என நிரூபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X