2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கேரள கஞ்சா கடத்திய எழுவர் கைது

Princiya Dixci   / 2016 ஜூலை 07 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹிரான் பிரியங்கர ஜயசிங்க

கற்பிட்டி, கந்தக்குழிக்குடாப் பகுதியில் இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட கேரள கஞ்சா 100 கிலோகிராமுடன் எழுவரை, இன்று வியாழக்கிழமை (07) அதிகாலை, விசேட போதைப்பொருள் தடுப்புக் குற்றப்புலானய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்டுள்ள கேரள கஞ்சா, ஒரு பில்லியன் ரூபாய் பெறுமதியானது எனவும் இச்சுற்றிவளைப்புக்கென 20 பொலிஸார் ஈடுபட்டனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள், கற்பிட்டிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் நீண்ட நாட்களாக இவர்கள் குறித்த கடத்தல் வியாபாரத்தில் ஈடுபடு வந்ததாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளைக் கற்பிட்டிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X