2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

கொலையுடன் தொடர்டைய சந்தேகநபர் கைது

Princiya Dixci   / 2016 மே 07 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலாவியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (05) இரவு இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்டைய ஒருவரைக் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக புத்தளம் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் பீ.எம். அனுர குணவர்தன, இன்று சனிக்கிழமை (07) தெரிவித்தார்.

பாலாவி சந்தியில் கடந்த வியாழக்கிழமை இரவு இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் புத்தளம், கரிக்கட்டையைச் சேர்ந்த நிஹார் முஹம்மது நிரோஸ் (வயது 33) எனும் குடும்பஸ்தர் கொல்லப்பட்டார்.

உயிரிழந்தவரின் ஜனாஸா, பிரேத பரிசோதனையின் பின்னர், நேற்று வெள்ளிக்கிழமை (06) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இச்சம்பவத்தில் காயத்துக்குள்ளான பாலாவியைச் சேர்ந்த மற்றுமொரு குடும்பஸ்தர் தொடர்ந்தும் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருபவரும், அவரது சகோதரருமே இக்கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேகநபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலாவது சந்தேகநபர், நேற்று (06) காலை கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் தொடர்ந்தும் வைத்தியசாலையிலேயே சிகிச்சைபெற்று வருகிறார்.

சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் இண்டாவது சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார். அவரைக் கைதுசெய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கொலைக்கான காரணங்கள் தொடர்பில் பல கோணங்களிலும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக புத்தளம் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X