2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கட்டாக்காலி மாடுகளால் அவஸ்தை

Niroshini   / 2016 ஜூலை 04 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியின் புத்தளம் சுற்றுவட்டம் உள்ளிட்ட பிரதான வீதியில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், இவ்வீதியூடாக போக்குவரத்து மேற்கொள்ளும் வாகன சாரதிகள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

இரவு நேரங்களில் மாத்திரமின்றி, பகல் நேரங்களிலும் கட்டாக்காலி மாடுகள் வீதியின் நடுவே நிற்பதால் வாகன நெரிசல்கள் காணப்படுகின்ற அதேவேளை, விபத்துக்களும் இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, இது குறித்து புத்தளம் நகர சபை உடனடியாக கவனம் செலுத்தி உடன் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X