2025 ஜூலை 05, சனிக்கிழமை

கடமைக்கு இடையூறு; பிரதேச சபை உறுப்பினர் சரீர பிணையில் விடுவிப்பு

Editorial   / 2020 மார்ச் 31 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூட் சமந்த

ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்த வேளை, கடற்படை வீரரின் செயற்பாட்டுக்கு இடையூறு விளைவித்தார் என்றக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவரை, 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்வதற்கு, ஹலாவத்த நீதவான் நீதிமன்ற நீதவான் மஞ்சுள ரத்நாயக்க, நேற்று(30) உத்தரவிட்டர்.

ஹலாவத்த கருகுபனே பிரதேச்தைச் சேர்ந்தவரே, இவ்வாறு சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி நபர், ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையில், குருக்குபானே பிரதேசத்தைப் பிரதிநித்துவம் செய்பவர் என்று தெரியவருகிறது.

ஊரடங்குச்சட்டம் பிறக்கப்பட்டிருந்த சந்தர்பத்தில், கருகுபனே கிராமத்திலுள்ள வீடொன்றில் கூடியிருந்த மக்கள்கூட்டத்தை அப்புறப்படுத்தும் செயற்பாட்டில், கடற்படை வீரரொருவர் ஈடுபட்டிருந்த போது, அவரதுச் செயற்பாட்டுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், மேற்படி உறுப்பினர் நடந்துகொண்டார் என்று தெரியவருகிறது.

இவ்விடயம் தொடர்பில், கடற்படை வீரர் ஆராச்சிக்கட்டுவ பொலிஸாருக்கு வழங்கியத் தகவலையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மேற்படி உறுப்பினரைக் கைதுசெய்தனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .