2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

கட்டுத்துவக்கு வெடித்ததில் உப பொலிஸ் பரிசோதகர் காயம்

Editorial   / 2019 பெப்ரவரி 20 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

புத்தளம் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி, நேற்று 19) விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்காகச் சென்ற போது, கட்டுத்துவக்கு வெடித்ததில் பாடுகாயமடைந்த அவர், புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புத்தளம் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர்,  நேற்று(19) மாலை ஆனமடு பெரியகுளம் பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் விசேட  சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதன்போது, மிருகங்களை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த கட்டுத்துவக்கு ஒன்று வெடித்ததில், குறித்த உப பொலிஸ் பரிசோதகர் காயமடைந்துள்ளார் .

காயமடைந்த உப பொலிஸ் பரிசோதகருடன் மேலும் சில பொலிஸ் உத்தியோகத்தர்களும் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த உப பொலிஸ் பரிசோதகர், ஆனமடுவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர், மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில்,  ஆனமடுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X