2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

கட்டுப்பாடு இழந்த கனரக வாகனம்

Freelancer   / 2023 ஜனவரி 10 , பி.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எம்.இஸட்.ஷாஜகான்

நீர்கொழும்பில் இருந்து  சிலாபம் நோக்கி பயணித்த கனரக வாகனமொன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு வாகனங்களும் கடை ஒன்றும் சேதமாகியுள்ளன.

இன்று மாலை 4.20 மணியளவில் கட்டுவை சதொச விற்பனை நிலையத்துக்கு முன்னால் இடம்பெற்ற இந்த விபத்தில்  நீர்கொழும்பு பெரியமுல்லை பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான நஸ்வாத் மரிக்கார் (வயது 55) என்பவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மூடப்பட்டிருந்த  கடை ஒன்றை மோதிய கனரக வாகனம், ச.தொ.ச  விற்பனை நிலையத்துக்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் நின்ற நபர் ஒருவரின் மீதும் அங்கு  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டோவின் மீதும்  மோதியுள்ளது. 

பின்னர் அருகில் இருந்த மதிலில் முட்டிமோதி சரிந்த நிலையில் நின்றுள்ளதுடன், கனரக வாகனத்தின் கீழ்  ஓட்டோ சிக்கிக் கொண்டுள்ளது. 

இதன் காரணமாக சதொச விற்பனை நிலையத்துக்கு அருகில் உள்ள ஒழுங்கை ஒழுங்கையில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டதுடன், அருகில் இருந்த கடையின் முன்பக்கத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

ஓட்டோவில் இருந்த நபர்  காயங்களுடன் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நீர்க்கொழும்பு பொலிஸார், சம்பவம் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .