2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கண்காட்சி

Niroshini   / 2016 ஜூலை 31 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

புத்தளம் தில்லையடியிலுள்ள முஹாஜிரீன் அரபுக்கல்லூரி மாணவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட இஸ்லாமிய கண்காட்சி, இரண்டு நாட்களாக இடம்பெற்று வருகிறது.

தில்லையடி முஹாஜிரீன் அரபுக்கல்லூரியின் ஸ்தாபகரும் அதிபருமான அஷ்ரப் முபாறக் (ரஷாதி) தலைமையில் இடம்பெற்றுவரும் இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட பிரதான அமைப்பாளரும் தொழிலதிபருமான எம்.ஆர்.எம்.அலிசப்ரி மற்றும் அ.இ.ம.காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் தந்தை முஹம்மது பதியுதீன் ஆகியோர் கலந்துகொண்டு குறித்த கண்காட்சிக்கூடத்தை திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில், உலமாக்கள், அயல் கிராம பள்ளி நிருவாக உறுப்பினர்கள், கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

குறித்த கண்காட்சியில் முஹாஜிரீன் அரபுக் கல்லூரி மாணவர்களின் முயற்சியால் ஹஜ் செய்யும்முறை, அரபு எழுத்தணி, கல்லூரியின் வரலாறு, கல்லூரியின் மாதிரி மற்றும் சிரட்டையினால் செய்யப்பட்ட பல வகையான  கைப்பணிகள் என்பன காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X