2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

கனவை நிஜப்படுத்துவதற்கான இலக்கு நோக்கிய வேலைத்திட்டம்

Editorial   / 2017 ஜூலை 05 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஹம்மது முஸப்பிர், ரஸீன் ரஸ்மின்

“எமது நாட்டில் காணியொன்றின் உண்மையான உரிமையாளர்களாவது இலட்சக்கணக்கான அப்பாவி மக்களின் கனவாக இருந்து வருகின்றது. அந்த மக்களின் கனவை நிஜப்படுத்துவதற்கான இலக்கை நோக்கிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்” என, காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

புத்தளம் மாவட்டத்தின் மாதம்பை நகரில் நிர்மாணிக்கப்பட்ட காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் புத்தளம் மாவட்ட  அலுவலகத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு கூறினார்.

பல வருடங்களாக தமது காணிகளுக்கு சட்டரீதியான உறுதிகள்  இல்லாதிருந்த மக்களுக்கு சட்டரீதியாக காணி உறுதிகளை வழங்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் வேலைத்திட்டத்தின் ஊடாக புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த 158 பேருக்கு, அவர்களுக்கான காணி உறுதிகள் இதன்போது அமைச்சரினால் வழங்கிவைக்கப்பட்டன.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் கயந்த கருணாதிலக்க,

“காணிப் பிரச்சினைகள் காரணமாக சிலருக்கு தமது பெற்றோர்கள் மற்றும் சகோதர உறவுகள் கூட மறந்து போகும் சந்தர்ப்பங்கள் உள்ளன. எல்லோரும் தமது காணிகளைப் பற்றி பெரிதாகவே பேசுகின்றனர். எமது நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளில் அதிகமானவை காணி தொடர்பான வழக்குகளே.

“பிரதேச செயலகங்களுக்கு வருவோரில் 75 சதவீதமானோருக்கு அதிகமானோர் காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்காகவே வருகின்றனர். இதனடிப்படையில், தமக்குரியது எனக் கூறிக் கொள்ளும் காணி என்பது மக்களின் அடிப்படைத் தேவையாக அரசாங்கம் இனங்கண்டிருக்கின்றது.

“தற்போதைய அரசாங்கம் ஆரம்பித்திருக்கும் பத்து இலட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு “தமக்குரியது“ எனக் கூறக்கூடிய காணி உறுதிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை நிஜப்படுத்துவதை முக்கிய இலக்காக ஆக்கிக் கொள்ளப்பட்டிருக்கின்றது. அந்த சவாலை ஏற்றுக்கொண்டே நான் காணி அமைச்சுப் பொறுப்பை ஏற்றிருக்கின்றேன்.

“இதனடிப்படையில் காணி அமைச்சை, மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கான துரிய தீர்வை வழங்கும் இடமாக ஆக்கிக்கொள்ள நான் தீர்மானித்துள்ளேன்.

“மக்களின் பிரச்சினைகள் குவிக்கப்படுவதைத் தடுத்து அந்தப் பிரச்சினைகளுக்குத் துரிதமாக தீர்வை வழங்கி ,மக்களுக்கு உதவி செய்வதே இதன் நோக்கமாகும். அதேபோன்று காணி சீர்திருத்த ஆணைக்குழு கடந்த காலங்களைப் போலன்றி மக்களுக்கு மிக நெருங்கிய ஒரு நிறுவனமாக ஆக்கிக் கொள்வதும் என நோக்காக உள்ளது” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X