Niroshini / 2016 ஜூலை 04 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

அரசியலமைப்புச் சீர்திருத்த நிபுணர் கரே வொலன், மீண்டும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமை அவரது இல்லத்தில் சந்தித்து, கலந்துரையாடினார்.
உத்தேச தேர்தல் சீர்திருத்தம், தற்போதைய தேர்தல் முறைமையில் சிறுபான்மை மக்களுக்கு உள்ள காப்பீடுகளைக் குறைத்துவிடக் கூடாது என்பதை அமைச்சர் ஹக்கீம் இதன்போது வலியுறுத்தினார். இரட்டை வாக்குச்சீட்டின் முக்கியத்துவம், விகிதாசார, தொகுதிவாரி தேர்தல் என்பன பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில், முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர், சர்வதேச விவகாரப் பணிப்பாளர் ஏ.எம். பாயிஸ், சட்டத்தரணி வை.எல்.எஸ். ஹமீத், இணைப்பாளர் லுவீ கணேஷதாசன் ஆகியோரும் பங்குபற்றிக் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
38 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
3 hours ago
4 hours ago