Editorial / 2020 மார்ச் 17 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
அசார் தீன்
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நோய் தொற்றின் காரணாமாக, இலங்கையில் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகைதரும் கற்பிட்டி பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
10 வருடங்களுக்கு மேலாக கற்பிட்டி கண்டக்குழி களப்பில், நீர்ச்சறுக்கள் விளையாட்டில் வெளிநாட்டவர்கள் ஈடுபட்டு வந்தனர்.
தற்போது கொரோனா தொற்று நோய் ஏற்பட்டு வருவதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகளை நம்பி பல்வேறு தொழில்களில் ஈடுபட்ட பலர் பாதிக்கபட்டுள்ளனர்.
அத்துடன், கற்பிட்டி பகுதியிலுள்ள பெரும்பாலான சுற்றுலா விடுதிகள், ஹோட்டல்கள் மூடிய நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago