Editorial / 2017 நவம்பர் 06 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
அநுராதபுரம், கஹட்டகஸ்திஹிலியவில், இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலின்போது கல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், நேற்று (05) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய, ஆறு பிள்ளைகளின் தந்தையே கொலை செய்யப்பட்டுள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த இருவருக்கும் வர்த்தக நடவடிக்கை தொடர்பில், கருத்து முரண்பாடு எழுந்துள்ளது. இதனையடுத்தே மோதல் உருவாகியுள்ளதுடன், அருகில் இருந்த கல்லை எடுத்த ஒருவர், மற்றையவரின் தலையில் தாக்கியுள்ளார். இதனால் படுகாயமுற்ற நபர், அதிக இரத்தப்போக்குக் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடையவரெனச் சந்தேகிக்கப்படும், களுத்துறை தெற்கு கமகொட பகுதியைச் சேர்ந்த ஒருவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026