2025 ஜூலை 30, புதன்கிழமை

காதலியிடம் சென்ற காதலன் சடலமாக மீட்பு

Editorial   / 2024 மே 07 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது காதலியின் வீட்டுக்குச் சென்று காணாமல் போன 30   வயதுடைய சுசித் ஜெயவன்ச என்ற இளைஞனின் சடலம் மாதம்பே பனிரெண்டாவ காப்புக்காட்டில் செவ்வாய்க்கிழமை (07) மீட்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

குளியாப்பிட்டியவில் உள்ள தனது காதலியின் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையிலேயே அவர் காணாமல் போயிருந்தார்.

இந்த காணாமல் போன சம்பவம் தொடர்பில் காதலியின் உறவினர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே குறித்த இளைஞனின் சடலம் பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .