2025 ஜூலை 30, புதன்கிழமை

குத்தகை நிறுவனத்தில் கொள்ளை

Editorial   / 2024 பெப்ரவரி 02 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

சிலாபத்திலுள்ள பிரதான குத்தகை நிறுவனமொன்றின் கிளையின்  பெட்டகத்தை உடைத்த கொள்ளையர்கள், அதிலிருந்து சுமார் 71 இலட்சம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றுள்ளதாக சிலாபம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த குத்தகைக் நிறுவனத்திற்குள் நுழைந்த கொள்ளையர்கள் குழுவொன்று சுவர்களை உடைத்து உள்ளே நுழைந்ததாகவும் அதன் பின்னர் பல மணித்தியாலங்கள் அங்கு நிலைக்கொண்டு, இயந்திர கிரைண்டரைப் பயன்படுத்தி இரண்டு பெட்டகங்களை வெட்டி அதிலிருந்த பணத்தை எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை (02) காலை குந்தகை நிறுவன ஊழியர்கள், கடமைக்காக வந்தபோது,   தமது நிறுவனத்தின் பெட்டகங்கள் உடைக்கப்பட்டு பணம் எடுத்துச் செல்லப்பட்டிருந்ததை அவதானித்ததுடன், இதுபற்றி பொலிஸாருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சிலாபம் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .