Editorial / 2019 பெப்ரவரி 19 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
முஹம்மது முஸப்பிர்,ஹிரன் பிரியங்கர
வென்னப்புவ வைக்கால பிரதேசத்திலிருந்து, வீட்டுக்குத் தெரியாமல் ஓடி வந்த இளைஞனும் யுவதியும், நேற்று மாலை (18) புத்தளம் -நவகத்தேகம பிரதேசத்திலுள்ள குளத்தில் நீராடிய போது, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனரென, புத்தளம் பிரிவுக்கான திடீர் மரண விசாரணை அதிகாரி பீ. எம். ஹிசாம் தெரிவித்தார்.
குறித்த இருவரும், கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் வீட்டை விட்டுவந்து, நவகத்தேகம பிரதேசத்திலுள்ள இளைஞனின் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த நிலையில், நேற்று மாலை (18) கெலேவெவ குளத்தில் நீராடச் சென்றிருந்த போதே, இந்த அசம்பாவிதம் நேர்ந்துள்ளது.
வென்னப்புவ-வைக்கால பிரதேசத்தைச் சேர்ந்த, 21 வயது இளைஞனும், நாத்தாண்டி கஹட்டவில பிரதேசத்தைச் சேர்ந்த, 17 வயதுடைய யுவதியுமே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
குளத்தில் நீராடிய போது, யுவதி அக்குளத்திலிருந்த குழி ஒன்றில் விழுந்துள்ளார். அதனைக் கண்ட இளைஞன், தனது காதலியை மீட்கச் சென்ற போது அவரும் அக்குழிக்குள் விழுந்துள்ளார். இதனை அவதானித்த அங்கிருந்த சிலர், இவர்கள் இருவரையும் குளத்திலிருந்து மீட்ட போதிலும், இருவரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனரென தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில், நவகத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
9 hours ago