2025 ஒக்டோபர் 22, புதன்கிழமை

கைவிடப்பட்ட நிலையில் 2 மீன்பிடிப் படகுகள் மீட்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 03 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிரான் பிரியங்கர

சிலாபம்-இரணைவில் கடற்கரைப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த இரண்டு  மீன்பிடிப் படகுகளை, சிலாபம் பொலிஸார் இன்று (03) அதிகாலை மீட்டுள்ளனர்.  

கடற்கரைக்கு இன்று (03) அதிகாலை வந்த மீனவர்கள் இவ்விரு படகுகளையும் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

மேற்படி மீன்பிடிப் படகுகளின் பதிவு இலக்கங்கள், கண்டறிய முடியாத வகையில் வகையில் அழிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்த பொலிஸார் ஏதேனும் கடத்தல் சம்பவங்களுக்கு இதனைப் பயன்படுத்தியுள்ளனரா என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .