Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S. Shivany / 2021 பெப்ரவரி 14 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் -கருவலகஸ்வௌ பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ரம்பாவௌ கிராம சேவையாளர் பிரிவில், இறந்த நிலையில் கொம்பன் யானையின் உடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் கொம்பன் யானை ஒன்று இறந்த நிலையில் காணப்படுவதாக, பிரதேச பொதுமக்களால் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு தகவல் வழங்கியதையடுத்து, அதிகாரிகள் நேரில் சென்று இறந்த நிலையில் காணப்பட்ட குறித்த கொம்பன் யானையின் உடலத்தை மீட்டுள்ளனர்.
இதன்போது யானையின் தந்தங்களை வன ஜீவராசிகள் காரியாலயத்துக்கு எடுத்து சென்றுள்ளனர்.
இறந்த கொம்பன் யானையின் உடற்கூற்று மரண பரிசோதனைகள், நிகவரட்டிய மிருக வைத்தியசாலையில் இடம்பெற உள்ளதாகவும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
3 hours ago
9 hours ago
9 hours ago
27 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
9 hours ago
27 Aug 2025