Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2016 ஜூலை 28 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம்.சனூன்
மனித உரிமைகள் தொடர்பான உயர் பயிற்சி நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த எட்டாவது குழுவினர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் செவ்வாய்க்கிழமை(26) காலை புத்தளம் மாவட்ட செயலக பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கருவலகஸ்வௌ மற்றும் புத்தளம் மாவட்ட கற்கை நிலையத்தில் தமது கற்கை நெறியினை நிறைவு செய்தவர்களுக்கான ஒருமித்த நிகழ்வாக நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் 34 மாணவர்கள் சித்தியடைந்து சான்றிதழ்களையும் பதக்கங்களையும் பெற்றுக்கொண்டனர்.
கொழும்பு பல்கலைக்கழகமும் புத்தளம் தொண்டு நிறுவனமான பிரன்ட்ஸ் நிறுவனமும் இணைந்து ஒழுங்கு செய்திருந்த மேற்படி பயிற்சி திட்டத்தில் வகுப்பறை, பரீட்சை என்பவற்றுக்கு அப்பால் உரிமைகள் மீறல்களை ஆய்தல் தொடர்பான கள விஜயம் மேற்கொண்டதுடன் அதனை அறிக்கைப்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.
2003ஆம் ஆண்டு போரூட் நிதி அனுசரணையில் ஆரம்பிக்கப்பட்ட இப்பயிற்சியானது, இதுவரை 441 பேர் வரை சித்தியடைந்து வெளியேறியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
05 May 2025