2025 மே 15, வியாழக்கிழமை

சாரதி சரீரப் பிணையில் விடுதலை

Princiya Dixci   / 2016 மே 11 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

 

 

 

நீர்கொழும்பு, கட்டுவப் பகுதியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட லொறியின் சாரதிக்கு ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு, நேற்று செவ்வாய்க்கிழமை (10), நீர்கொழும்பு மேலதிக நீதவான் மஹேஸிகா தனுன்சூரிய உத்தரவிட்டுள்ளார்.


கடந்த ஞாயிற்றுக்கிழமை (08), கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்த லொறியொன்று எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின் சாரதி உயிரிழந்துள்ளார்.


சம்பவத்தில் உயிரிழந்தவர், கட்டுவபிட்டி, நிர்மல மாவத்தையைச் சேர்ந்த 28 வயதுடைய ரங்க தினேஸ் என்பவரெனப் பொலிஸார் தெரிவித்தனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .