2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சிவப்பு நிற சந்தன மரக் குற்றிகளுடன் ஒருவர் கைது

Princiya Dixci   / 2016 ஜூலை 02 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏத்தாளைப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (30) இரவு பலகோடி ரூபாய் பெறுமதியான சிவப்பு நிற சந்தன மரக் குற்றிகளுடன் ஒருவரைக் கைதுசெய்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார், நேற்று வெள்ளிக்கிழமை (01) தெரிவித்தனர்.

கற்பிட்டி பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் ஏத்தாளைப் பிரதேசத்தில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன்போது ஏத்தாளைப் பிரதேசத்திலிருந்து லொறியொன்றின் மூலம் 179 சிவப்பு நிற சந்தன மரக் குற்றிகள் கற்பிட்டி பிரதேசத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையிலேயே அவை கைப்பற்றப்பட்டதுடன், கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த லொறியின் உரிமையாளரான சாரதியும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதனோடு தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்கள் குறித்து  விசாரணைகளை ஆரம்பித்துள்ள கற்பிட்டி பொலிஸார், சிவப்பு நிற சந்தன மரக் குற்றிகள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது? எங்கு கொண்டு செல்லப்பட்டது? என்பது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள லொறியின் சாரதியிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X