ஹிரான் பிரியங்கர / 2017 ஒக்டோபர் 16 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் மணல் அகழ்வு நடவடிக்கையின் காரணமாக புத்தளம், வனாதவில்லு, மொன்கிலாறு ஓயா அச்சுறுத்தலுக்குள்ளாகி வருவதாக பிரதேசவாசிகள் விசனம் தெரிவித்தனர்.
இதனால் குறித்த மொன்கிலாறு ஓயாவை அண்மித்த பகுதியில் வாழும் மக்களது காணிகளும் பாதிக்கப்படுவதாகவும் பிரதேசவாசிகள் விசனம் தெரிவித்தனர்.
மழைக்காலங்களில் வௌ்ளப்பெருக்கு ஏற்படும் போது, ஓயாவை அண்டிய பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் இயற்கை வளங்கள் பல அழிவடைந்து வருவதாகவும் பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டினர்.
“நாங்கள் அன்றாடம் வேலை செய்து பிழைக்கும் கூலித்தொழிலாளர். எங்களால் இதற்கு ஒன்றும் செய்ய முடியாது. இவ்வாறு இயற்கை வளம் சூரையாடப்படுவதை, பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கவனம் எடுத்து தடுத்து நிறுத்த வேண்டும்” என பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்தனர்.


3 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
25 Oct 2025