2025 ஒக்டோபர் 17, வெள்ளிக்கிழமை

சட்டவிரோதமாக களைநாசினிகளை எடுத்துச்சென்ற இருவர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 20 , மு.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.பிர்தெளஸ்

அத்தியவசிய உணவுப் பொருள்களுடன் சட்டவிரோதமான முறையில் இரசாயன களைநாசினிகளை எடுத்துச்சென்ற இருவரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கடற்படையின் மதவாச்சி- பூனேவ வீதிச் சோதனைச்சாவடியில் வைத்து லொறியொன்றினை சனிக்கிழமை (18) பரிசோதனைக்குட்படுத்தியபோது, இரு சந்தேக நபர்கள்  கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 160இற்கும் மேற்பட்ட  இரசாயன மருந்து போத்தல்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் 31 மற்றும் 37 வயதுடைய கிளிநொச்சி மற்றும் வவுனியா பகுதிகளை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில்  இருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக சந்தேகநபர்கள் இருவரையும் லொறியையும் கடற்படையினர், மதவாச்சி  பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .